சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுபிக்‌ஷா கடன் மோசடி வழக்கு : சுபிக்‌ஷா நிர்வாக இயக்குனர் மனு தள்ளுபடி
Published on
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சுபிக்‌ஷா நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கடனை வசூலிக்க ஐசிஐசி ஐ வங்கிக்கு அனுமதியளித்து கடன் வசூலிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுபிக்‌ஷா சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடன் வசூலிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியானது என்று தெரிவித்தார். மேலும் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com