

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.