Stunt Master Death | Pa. Ranjith | ஸ்டண்ட் மாஸ்டர் மரண விவகாரம் | இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்
வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் பகுதியில் உள்ள இல்லத்தில் மோகன்ராஜின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சென்ற இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் ஸ்டண்ட் மாஸ்டரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த பா.ரஞ்சித், இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அரசு இன்சூரன்ஸ் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினார்.
Next Story
