கிட்னியை விற்று கடனை செலுத்த சொன்ன நண்பர் - ஸ்டூடியோ ஊழியர் தற்கொலை

x

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் வீடியோ பதிவு செய்துவிட்டு ஸ்டூடியோ ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிபாளையம், ஐந்து பனை பகுதியை சேர்ந்த நந்தகோபால் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடிட் செய்யும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்டூடியோ மூலம் பழக்கமான தினேஷ், ஹரி ஆகியோரிடம் நந்தகோபால் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை நந்தகோபால் திரும்ப கொடுக்காத நிலையில், தினேஷ், ஹரி ஆகியோர் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நந்தகோபால், தனது சாவுக்கு தினேஷ், ஹரி தான் காரணம் என வீடியோ பதிவு செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, கிட்னியை விற்றாவது பணத்தை கொடுக்குமாறு, நந்தகோபாலிடம் தினேஷ் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்