Tirupur | Murugan | முழு வரலாற்றையும் ஓவியங்களாக்கிய மாணவர்கள் - அழகே உருவாய் தோன்றிய முருகன்

முழு வரலாற்றையும் ஓவியங்களாக்கிய மாணவர்கள் - அழகே உருவாய் தோன்றிய முருகன்

Tirupur | Murugan | முழு வரலாற்றையும் ஓவியங்களாக்கிய மாணவர்கள் - அழகே உருவாய் தோன்றிய முருகன் #tirupur #murugan #murugantemple #thanthitv முருகன் வரலாற்றை சுவர் ஓவியமாக வரைந்த கல்லூரி மாணவர்கள் - பாராட்டு திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவில் சுற்றுச்சுவரில் முருகனின் வரலாற்றை ஓவியங்களாக வடிவமைத்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொங்கணகிரி முருகன் கோவிலின் சுற்றுச்சுவரில், முருகனின் அறுபடை வீடுகள், புராண வரலாறுகள் மற்றும் அவர் நிகழ்த்திய அதிசயங்களை சித்தரிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் 35 நாட்கள் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளனர். இந்த ஓவியங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து வைத்ததுடன், ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், மாணவர்களின் கலைத்திறனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com