

அனைத்து மாணவர்களும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.