பணியிட மாற்றம்.. பாச போராட்டம் நடத்திய மாணவர்கள் - பேசும்போதே கண்ணீர் விட்டு அழுத HM

பணியிட மாற்றம்.. பாச போராட்டம் நடத்திய மாணவர்கள் - பேசும்போதே கண்ணீர் விட்டு அழுத ஹ்ம்

பணி மாறுதல் கோரிய தலைமை ஆசிரியர் - பாசப்போராட்டம் நடத்திய மாணவர்கள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாறுதலில் செல்லக்கூடாது என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் முடிவை மாற்றிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 13 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியற்றி வருபவர் பத்மாவதி. இவர் சொந்த காரணங்களுக்காக பணியிட மாறுதல் பெற்றுள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கூறி பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர் அதிகாரிகள் பெற்றோர்களும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மீண்டும் அதே பள்ளியில் தொடர்வதாக கண்ணீர் மல்க கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com