ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் : மாணவர்கள் போராட்டம்...

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் : மாணவர்கள் போராட்டம்...
Published on
ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி என்ற தமிழாசிரியர் வேறு பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். பணிமாற்றத்தை கண்டித்தும், பள்ளியில் குடிநீர் கழிவறை, கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 100 பேர் பள்ளியின் வெளியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com