தேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.
தேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Published on

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசுக்கலைகல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தேர்வு கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது கண்டிக்கதக்கது என்றும், அதை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com