``இந்த சின்ன வயசுல இவ்ளோ நேர்மையா? யாருப்பா நீங்க?''உருகி நின்ற இன்ஸ்பெக்டர்
சாலையில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களை காவல் ஆய்வாளர் பரிசு வழங்கி பாராட்டினார்.
திருவாரூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விகாஸ் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஆண்ட்ராய்டு போன் ஒன்று கீழே கிடந்த்தை கவனித்த மாணவர்கள் அதனை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று ஆய்வாளர் செல்வி வெர்ஜினியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் காவல் ஆய்வாளர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story
