பள்ளியிலேயே சாவகாசமாக மது அருந்திய மாணவிகள் - பெற்றோர்களை பதறவைத்த வீடியோ - HMக்கு தேடி வந்த ஆப்பு

பள்ளியிலேயே சாவகாசமாக மது அருந்திய மாணவிகள் - பெற்றோர்களை பதறவைத்த வீடியோ - HMக்கு தேடி வந்த ஆப்பு

பள்ளியிலேயே சாவகாசமாக மது அருந்திய மாணவிகள் - தீயாய் பரவிய வீடியோ - HMக்கு தேடி வந்த ஆப்பு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அரசு பள்ளியில், மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பள்ளிக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், சக மாணவர் ஒருவர் மதுபாட்டில் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்ததாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் போதைப் பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனிடையே, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், பள்ளி தலைமை ஆசிரியசை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தக்கலை போலீசார் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com