டீச்சர் மண்டையை உடைத்த மாணவர்கள் -பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு

x

திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை கண்டித்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மாணவர்கள் மது பாட்டில்களால் தாக்கியுள்ளனர். பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனபதால் காவல்துறை பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு சார்பு ஆய்வாளர் ஒரு தலைமை காவலர் என இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்