தந்தை மறைந்தும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி அசத்தல் வெற்றி

x

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

கோணப்பம்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா, பொதுதேர்வுக்கு தயாரான நிலையில் தந்தையின் திடீர் மரணத்தையும் எதிர்கொண்டு,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த மாணவி அறிவியலில் 100 மதிப்பெண்கள் என மொத்தமாக 461 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் தனது தந்தை கல்வி முக்கியம் என கூறி படிக்க ஊக்குவித்ததாகவும், தந்தையின் ஆசை படி படித்து ஆட்சியராக உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்