பணத்தை தவறவிட்ட மாணவி - ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கல்லூரி மாணவி சாலையில் தவறவிட்ட பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர் சால்வை அணிவித்து பாராட்டினார். மாணவி ஒருவரின் தாயார் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்த தங்க நகையை அடகு வைத்து, 19 ஆயிரம் பணத்தை பையில் வைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பணத்தை தவறவிட்ட நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம் அந்த பணத்தை எடுத்து சென்று வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார்.
Next Story