6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை

6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில், குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த கல்லூரி மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது உமர், வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இவரது பெற்றோர், தம்பி, தங்கை என அனைவரும் துபாயில் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இது மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உமர், தனது குடியிருப்பு பகுதியின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com