மாணவிக்கு பாலியல் தொல்லை- நடத்துனரை கைது செய்யக் கோரி முற்றுகை
சென்னை வளசரவாக்கத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு மினி பேருந்து நடத்துனரை கைது செய்யக் கோரி, மாதர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நடத்துனரை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதால் கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாகக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Next Story
