நெல்லை பள்ளிக்குள் மாணவன் அரிவாள் வெட்டு - அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை

x

நெல்லை தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தாக்குதலில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் வேதனையளிப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்