பள்ளி சிறுமியை காதலிப்பதாக கூறி வேன் டிரைவர் செய்த செயல்
சென்னை கோயம்பேடு பகுதியில் ஆறாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, வேன் டிரைவர் மீது போக்சோ புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி பள்ளிக்குச் செல்லும் ஒப்பந்த வேனின் டிரைவர், சிறுமியை காதல் செய்வதாக தெரிவித்து, ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், கோயம்பேடு காவல் நிலையத்தில் வேன் டிரைவர் மீது போக்சோ புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
