பிரபல கல்லூரி மீது... கலெக்டரிடம் மாணவன் பரபரப்பு புகார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் மாணவனை தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி மீது பாதிக்கப்பட்ட மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளோமா படித்து வரும் வசீம் அகமத் குடும்ப சூழ் நிலை காரணமாக கல்லூரி கட்டணத்தில் 7000 ரூபாய் குறைவாக கட்டி இருக்கிறார். இதனால் மொத்த பணத்தையும் கட்டினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியுமென கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால், செமஸ்டர் தேர்வு எழுதமுடியாத நிலை உருவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Next Story
