3-வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை - உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

x

சேலத்தில், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கௌதம் (வயது 20), கடந்த 2023 முதல் இரண்டு முறை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி இருந்தார்.

கடந்த முயற்சிகளில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காததால், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தேர்வு எழுதியிருந்தார். இந்த முறை தேர்வை எதிர்பார்த்த அளவுக்கு எழுதவில்லை என்பதால், மனமுடைந்த கௌதம், வீட்டில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்