மாடிப்படி ஏறிய மாணவன் மரணம் கல்லூரியில் அதிர்ச்சிகதறி அழும் பெற்றோர்
ராமநாதபுரத்தில் கல்லூரியில் மயங்கி விழுந்து உயிரிழந்த, மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது வேதனை அளித்துள்ளது. 18 வயதான முஹமது ரஸின் என்ற மாணவர் ராமநாதபுரம் தனியார் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் மாடிப்படி ஏறும் போது மயங்கி விழுந்ததுள்ளார். உடனே அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் மாணவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
