தொடர்ந்து மாணவிக்கு பாலியல் சித்திரவதை.. பேராசிரியர் போர்வையில் உலவிய `மிருகம்’ கைது

x

Cuddalore || தொடர்ந்து மாணவிக்கு பாலியல் சித்திரவதை.. பேராசிரியர் போர்வையில் உலவிய `மிருகம்’ கைது

மயக்க மருந்து கொடுத்து மாணவியை வன்கொடுமை செய்த பேராசிரியர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

வேளாண்துறையில் ராஜா என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல்கலை.யில் ஆராய்ச்சி படிப்பு படித்துவந்த மாணவியிடம் படிப்புக்கு உதவுவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து மாணவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்த வீடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி மாணவியை ராஜா தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலடைந்த மாணவி போலீசில் புகாரளித்த நிலையில், ராஜாவை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்