பள்ளி மாறுதலில் விருப்பம் இல்லாமல் மாணவர் தற்கொலை

x

வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டாம் என கூறி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகண்ணன். சென்னையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் இஷாந்த் 9ம் வகுப்பு முடித்துள்ள நிலையில் குடும்பத்தினரோடு சென்னைக்கு குடிப்பெயர திட்டமிட்டுள்ளார். இதற்கு இஷாந்த் குடும்பத்தினரிடம் ஏற்கனவே படித்து வந்த பள்ளியை விட்டு வர முடியாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இஷாந்த் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்