Classல் மயங்கி விழுந்த மாணவன் மரணம் - கதறிய தாய் சொன்ன வார்த்தை
விழுப்புரம் மாவட்டம் விரட்டிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சிறப்பு வகுப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவன் மோகன்ராஜ் சிறிது நேரத்திலேயே வகுப்பறையில் மயங்கி விழுந்தார். அப்போது பணியில் இருந்த ஆசிரியர், உடனடியாக மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவன் மோகன்ராஜ், வகுப்பறையில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மிகவும் நன்றாக படிக்கும் மாணவன் மோகன்ராஜின் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்த பள்ளி தாளாளர், பள்ளி வரலாற்றில் இது போன்ற அசம்பாவிதம் நடந்தது வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
