"ஜனவரி 8-ல் அரசு பணியாளர் ஒருநாள் வேலை நிறுத்தம்"

40 % காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழக அரசில் காலியாக உள்ள 40 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, வரும் 8 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கையில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், 30 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, வரும் 8 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com