தவறு செய்யும் காவலர்களுக்கு உச்சபட்ச தண்டனை தர வேண்டும்" - ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்
காவல் நிலைய விசாரணையின்போது, தவறு செய்யும் காவலர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று, சாத்தான் குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெர்சிஸ் என்பவர் தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் ஏழை, எளிய மக்கள், போலீசாரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்தார். ஆனால், பண பலம், அரசியல் பின்புலம் கொண்டவர்களை போலீசார் தாக்குவதில்லை என்றும் தெரிவித்தார். காவல் நிலைய மரண வழக்குகளில், கீழ்நிலையில் இருக்கும் காவலர்களே சேர்க்கப்படுகிறார்கள் என்றும், டிஎஸ்பி, எஸ்பி, டிஜிபி போன்ற யாரும் சேர்க்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story