"15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு" : 3 பேர் கைது - கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதி

திருவண்ணாமலை வேங்கிக்கால் பஞ்சாயத்து பொன்னுசாமி நகரில், வீட்டிலேயே கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், மற்றும் உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
"15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு" : 3 பேர் கைது - கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதி
Published on
திருவண்ணாமலை வேங்கிக்கால் பஞ்சாயத்து பொன்னுசாமி நகரில், வீட்டிலேயே கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், மற்றும் உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டனர். சீல் வைக்கப்பட்ட வீட்டில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயலில் ஈடுபட்ட இவர்களின் வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை சுமார் 19 ஆயிரம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com