Street Dogs | Rabies | தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, ரேபிஸ் தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நவம்பர் மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு வார்டாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
