நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து குதறிய தெரு நாய்கள்
சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் புகுந்த தெரு நாய்கள், சுமார் 100-க்கும் மேற்பட்ட கோழிகளைக் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியம் கோழிபண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை வந்து பார்த்த பொழுது, 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்துள்ளன. சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்ததில், 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பண்ணைக்குள் புகுந்து, கோழிகளை கடித்து கொன்றது தெரியவந்துள்ளது.
Next Story
