Stray Dogs Issue | தெருநாய் பிரச்சனை.. நாடாளுமன்றம் அதிர ஒலித்த குரல்
இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொடர்ச்சியாக குரைப்பதால் பொதுமக்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக புதுச்சேரி பாஜக எம்.பி., நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்...
இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பதாகவும், தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரிப்பது குழந்தைகள், முதியவர்களுக்கு ஆபத்தாக இருப்பதாகவும் கூறினார். ரேபிஸ் நோயால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும், நாய்கள் வாகனங்களை துரத்துவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை கட்டுப்படுத்த கருத்தடை திட்டங்கள், தெரு நாய்களுக்கான மையங்கள் அமைத்தல், நாய் வளர்ப்போருக்கு லைசன்ஸ் கட்டாயமாக்குதல், பொதுவிடங்களில் நாய்களுக்கு வாய்க்கவசம் அணிவித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Next Story
