6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்... தாய் கதறல் பேட்டி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தெரு நாய் கடித்ததில் ஆறு வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு என்பவரின் மகன் அஜித் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டின் முன்பு விளையாடிய சிறுவன் அஜித்தை தெருநாய் கடித்துக் குதறியுள்ளது. படுகாயம் அடைந்த சிறுவன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
