Stray Dog Bite | வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய்
வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய்
Stray Dog Bite | வேலைக்கு சென்றவர்களாக பார்த்து காலை குதறிய வெறிநாய் வாணியம்பாடியில் அடுத்தடுத்து பொதுமக்களை துரத்தி கடித்த தெருநாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி, நகராட்சிக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, பணிக்கு சென்றவர்களை, துரத்தி துரத்தி, கடித்துள்ளது. இதில் பெரியப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் , சந்திரன், தட்சிணாமூர்த்தி கார்த்திக் ஆகிய 4 நபர்கள் கால்களில் பல இடத்தில் காயம் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலையில் சாலையில் நடந்து சென்ற நபர்களை தெருநாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவதால், வாணியம்பாடி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது
