உ.பி.யில் சூறைக்காற்று...100-க்கும் மேற்பட்ட கிளிகள் பலி

x

உத்தரப்பிரதேசத்தில் சூறைக்காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிளிகள் இறந்தன. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, குர்சராய் பகுதியில் உள்ள கிராமத்தை தாக்கிய கடுமையான சூறைக்காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் மற்றும் மைனாக்கள் இறந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், கிளிகளை குழி தோண்டி புதைத்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்