Thiruparankundram | தடுத்து நிறுத்தம் - திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு
Thiruparankundram | தடுத்து நிறுத்தம் - திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு #thiruparangundram #sikkandhardharka #police மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறி, இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தர்காவில் தங்கி வழிபடும் முறைதாரர்கள் ஏழு நாட்களுக்கு ஒருமுறை மாறுவது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில், அத்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவதற்காக தக்காளி, அரிசி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், தங்களது வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதாக கூறியதுடன், தர்கா சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், நிர்வாகிகளுடன் ஆலோசித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது குறித்தும் தெரிவித்துள்ளனர்.
