பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைக்க, முதலில் ஆண்களுக்குத்தான் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். மதுரை தியாகராசர் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தேவாசீர்வாதம், சமூக வலைதளங்களில் பெண்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.சிங்கங்கள் இரைக்கு காத்திருப்பது போல, வலைதளங்களில் போலியான கணக்குகளில் பலர் காத்திருப்பதாக அவர் கூறினார்.