Stone Quarry | Viral Video|குவாரிக்காக நடுரோட்டில் கேங் வார்.. காட்சிகளை கண்டு நடுங்கிய சிவகங்கை
Stone Quarry | Viral Video|குவாரிக்காக நடுரோட்டில் கேங் வார்.. காட்சிகளை கண்டு நடுங்கிய சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி அமைக்கப்படும் நிலையில், ஒரேநாளில் குவாரிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது... முதலில், குவாரி செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்திய ஆதரவு தரப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், குவாரிக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட மனுவில், வெளியூர் நபர்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
