ரயில் மீது கல்வீச்சு - 12 வயது சிறுமி காயம்.. சிறுவர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார்
நாகர்கோவிலில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசிய நான்கு சிறார்களை போலீசார் கைது செய்தனர்.கொல்லம் கன்னியாகுமரி இடையே தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த 4 சிறுவர்கள் திடீரென ரயில் மீது கல் வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த 12 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் மற்றும் நாகர்கோயில் போலீசார் 4 சிறுவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
Next Story
