

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய ஆர்சனிக், மெர்குரி, காட்மியம் ஆகிய பொருட்களை எந்த முறை பயன்படுத்தி சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சுங்கதுறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.