ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடக்கம்

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை விலக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடக்கம்
Published on
தூத்துக்குடி சிப்காட்டில். ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது காப்பர் ஆலையை செயல்படுத்த மத்திய வணிக மற்றும் பொருளாதார அமைச்சகத்திடம் கடந்த 2013 -ல் "காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்து" பெற்றிருந்தது. இதனை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் முத்துராமன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், வேதாந்தா நிறுவனத்தின் இரண்டாவது காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்ட,"காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய கோரி மத்திய வணிக மற்றும் பொருளாதார அமைச்சகத்துக்கு மனுக்கள் அனுப்பியிருந்தார். இந்நிலையில், மனுதாரர் முத்துராமனுக்கு வணிக மற்றும் பொருளாதார அமைச்சகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், வேதாந்தா நிறுவனமே தாமாக முன்வந்து சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், வேதாந்தாவின் சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை விலக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com