ஸ்டெர்லைட் வழக்கு 3ம் நாள் விசாரணை நிறைவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவடைந்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பாலி நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டரை நாட்களாக நடைபெற்ற வாதம் நிறைவடைந்ததை அடுத்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, வரும் 5ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்று இருதரப்பு வாதங்களை முடித்துக்கொள்ள உத்தரவிட்டார்.

2013ல் தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு தொடர்பாக எதுவும் கூறவில்லை - வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின் போது கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு தொடர்பாக எதுவும் கூறவில்லை என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com