சிலை கடத்தல் வழக்கு : பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல்

சிலை கடத்தல் வழக்கில் முக்கிய நபர்கள் இருப்பதால், உச்சநீதிமன்றம் அனுமதித்தால், அவற்றின் விவரங்களை சீலிட்ட உறையில் அளிப்பதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்கு : பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல்
Published on

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக, பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், தனக்கும், தனது குழுவுக்கும் முட்டுக்கட்டை விதித்ததாக தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனது சேவை தேவைப்படுகிறது என உச்சநீதிமன்றம் கருதி உத்தரவிட்டால், அதை ஏற்று எவ்வித பாரபட்சமும் இன்றி கடமையை தொடர்ந்து மேற்கொள்ள தயார் என்றும் அந்த பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com