மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகரில் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
Published on
விருதுநகரில் மாநில அளவிலான சிலம்ப போட்டி தொடங்கியது. இதில், பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 32 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன. இரண்டு பிரிவுகளாக நடைபெறும் சிலம்ப போட்டியின் இறுதிப் போட்டி, ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெறுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய சிலம்ப போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
X

Thanthi TV
www.thanthitv.com