ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர், தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக்கொள்கை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக நடந்த தமிழ் வரைவு அறிக்கை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த குழு அலுவலகம் கலைக்கப்பட்டு, மீண்டும் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் தமிழ் வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், பரிந்துரைகளை அரசு ஏற்கும்பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.