பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 திட்டம் : டெபிட் , கிரெடிட் கார்ட், யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்

பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 திட்டம் : டெபிட் , கிரெடிட் கார்ட், யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்
Published on
பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இம்முறையின் மூலம் தற்போது இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகளின் டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் மற்றும் யுபிஐ போன்றவற்றின் மூலம் கட்டணங்களை செலுத்தலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரொக்கமாக பதிவுத்துறை அலுவலகத்தில் ரூபாய் ஆயிரம் வரையிலும், வருகிற 28-ம் தேதி முதல் வங்கிகளின் வரைவோலை மூலம் ரூபாய் 5 ஆயிரம் வரையிலும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com