"ஸ்டார் 2.0" திட்டம் : 10 மாதத்தில் 19,20,174 ஆவணங்கள் பதிவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்ட ஆவணப்பதிவு திட்டம் ஸ்டார் 2.0 மூலம் இதுவரை 19 லட்சத்து 20 ஆயிரத்து 174 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
"ஸ்டார் 2.0" திட்டம் : 10 மாதத்தில் 19,20,174 ஆவணங்கள் பதிவு
Published on

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவணப்பதிவு, நிலுவையில் வைத்தல் மற்றும் பதிவு செய்ய மறுத்தல் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு சார்பதிவாளர்கள் கையெப்பமிட்ட படிவத்தை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சார்பதிவாளர் வாய்மொழியாக ஆவணப்பதிவை மறுத்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com