உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

x

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுகிறது.

நவம்பர் மாதம் வரை நடைபெறும் முகாம்களில், நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மனுதாரர் பெயர், குடும்ப பதிவு எண், பாலினம், முகவரி, தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்து, சேவைப்பட்டியலில் கோரிக்கைகளை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மனுவை பெறும் அதிகாரிகள், மனுதாரரிடமிருந்து கையொப்பம் பெற்று அரசு முத்திரையுடன் சீல் வைத்து, ஒப்புகைச்சீட்டு வழங்கும் வகையில் விண்ணப்ப படிவம் உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்