

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், சென்னை - புரசைவாக்கம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். உடல் நலம் குறித்து க. அன்பழகனிடம் கேட்டறிந்த மு.க. ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைய வேண்டி, வாழ்த்து தெரிவித்தார்.