ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதா ? - பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதா ? - பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
Published on

சமூக நல்லிணக்கத்திற்காக போராடி வரும் முத்தரசன்,பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் பேசாத ஒன்றை குறிப்பிட்டு ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். அமைதியாக வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பை பரப்பி, ஜனநாயகவாதிகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பதற்றமான சூழலை உருவாக்குவது தமிழ் சமூகத்திற்கு பேராபத்தானது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com