கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுகுறித்து ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அவர் வலியுறுத்தி உள்ளார்.