மாதா சிலையின் கையில் வடிந்த ரத்தம்? - ஆச்சரியத்துடன் மக்கள் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள மேரி மாதா சிலையின் கையில் இருந்து ரத்தம் வழிந்ததாக தகவல் பரவியதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடினர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திரு இருதய ஆலயத்துக்கு கனடா நாட்டில் இருந்து 2 அடி உயரமுள்ள இருதயத்தை கையில் தாங்கியபடி இருக்கும் மாத சிலை கொண்டு வரப்பட்டது. கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள அந்த சிலையை இன்று ஒரு பெண் வணங்கி கொண்டிருந்தபோது, சிலையின் கையில் இருந்து ரத்தம் வழிவது போல தெரிந்துள்ளது. இந்த தகவல் பரவியதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் வந்து சிலையை ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com